பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

19



தமிழினத்தின்
தனித்தலைவர்


தொண்டொன்றே வாழ்வின் தொழிலாக நாளெல்லாம்
கொண்டிலங்கும் நம்பெரியார் கோலம் வடித்தெடுத்தே
வண்டலுக்குப் பேர்பெற்று வாழ்வுதரும் தஞ்சைமண்ணில்
அன்றெடுத்தார் ஓர்சிலைதான் அந்நாள் கவியரங்கில்
நாட்டுக் குழைத்துவரும் நம்மினத்துக் காவலர்க்குப்
பாட்டெழுத வேண்டிப் பணித்திருந்தார் வீரமணி
நன்றிக் கடன் செலுத்த நல்லதொரு வாய்ப்பிதுவாம்
என்றுநான் எண்ணி இசைவும் அளித்துவிட்டேன்
சூழ்நிலையால் பாமாலை சூட்ட இயலாமல்
ஆழ்துயரம் கவ்வியதால் அன்றுமுதல் நொந்திருந்தேன்
அந்த மனத்துயரம் ஆறும் படியாக
இந்தநிலை வாய்த்ததென எண்ணி மகிழ்கின்றேன்
அன்றுதஞ்சை மண்ணில் அவர்க்குச் சிலையெடுத்தார்
இன்றுதிண்டுக் கல்லில் எடுத்தார் சிலையொன்று
பாமலர்கள் சூட்டப் பணித்தமையால் இவ்வரங்கில்
நாமகிழ நெஞ்சம் நனிமகிழப் பாடுகின்றேன்
என்தந்தை தோன்றிய ஊர் இவ்வூரே; அவ்வூரில்
முன்வந்த எம்மினத்தின் மூத்ததிருத் தந்தையை நான்
பாடுகின்ற பேறடைந்தேன்; பாவலர்கள் சொன்மலர்ள்
சூடுகின்ற தாள்மலரைச் சூடுகிறேன் என்தலையில்
பற்றிப் படர்ந்திருந்து பாழ்செய்யும் ஆரியத்தைச்
சுற்றித் தொலைப்பதற்குச் சூறா வளியாகி
வேரெல்லாம் பேர்த்தெறிய வேகப் புயலாகி
ஊரெல்லாம் நாடெல்லாம் ஓடி வரும்நாளில்
ஆய்ந்துணர மாட்டா தறியாமைப் பேரிருளில்
தோய்ந்து கிடந்தோர் தொடுத்தெறிந்த கல்லெல்லாம்
சேர்ந்து திரண்டு சிலையாக வந்தின்று
நேர்ந்திங்கு நிற்பதுபோல் நெஞ்சம் நினைக்கிறது
கல்லுக்கும் சொல்லுக்கும் காட்டும் எதிர்ப்புக்கும்
தொல்லைக்கும் அஞ்சாது தொண்டுசெயும் அந்நாளில்
ஆரியரின் கால்வருடும் அன்பர் திருக்கூட்டம்
சீறிவரும் நாகமெனச் சேர்ந்து பெரியார்மேல்