பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஞாயிறும் திங்களும்


இகழ்ச்சிக்கும் நம்தலைவர் கலங்க வில்லை
       ஏத்தெடுத்த புகழ்ச்சிக்கும் மயங்க வில்லை
மிகச்சிவந்த பகலவன்போல் கடமை யாற்றி
       மேற்கொண்ட பணியாற்றி வெற்றி கண்டார்
இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் செவிகள் சாய்த்தால்
       இயங்காது பொதுத்தொண்டு, குறிக்கோள் ஒன்றே
அகத்திருக்க வேண்டுமெனும் நெறியைக் காட்டும்
       அய்யாபோல் தொண்டாற்ற வல்லார் யாரோ?

எவ்வுணவே என்றாலும் ஏற்றுக் கொள்ளும்,
       இரவெனினும் பகலெனினும் தொண்டு செய்யும்,
எவ்வழியில் என்றாலும் பயணஞ் செய்யும்
       இருவிழியும் துயிலாது விழித்தி ருக்கும்
செவ்வாயில் பல்லெல்லாம் வீழ்ந்த போதும்
       செம்மையுறச் சொல்லெல்லாம் அவர்நா ஓதும்
ஒவ்வொருகால் நோய்வரினும் எதிர்த்து நிற்கும்
       உளம்போல அவருடலும் புரட்சி செய்யும்.


ஏறுங்கால் மேடைதரிைல் அம்மா அம்மா
       என அரற்றுங் குரல்கூடக் குகையில் சிங்கம்
சிறுங்கால் முழங்குவது போலக் கேட்கும்
       சேர்ந்துவிட்ட முதுமையிலும் மேடை ஏறிக்
கூறுங்கால் அவர்மொழிகள் கனலைக் கக்கும்
       கொழுந்துவிடும் சிந்தனைகள் ஒளியை வீசும்
சேருங்கள் தமிழினத்தீர் சிந்தித் தாய்ந்து
       தெளியுங்கள் விழியுங்கள் என்பார் அய்யா.

காரோட்டும் பெருவளிபோல் உலகைப் பற்றும்
       காரிருளை ஒட்டுகிற பகல வன்போல்
ஈரோட்டில் வந்துதித்த பெரியார் தாமும்
       இனஇழிவைத் தொலைப்பதற்கு நடத்தி வந்த
போராட்டம் எத்தனையோ, அதனால் அய்யா
       புகுந்தசிறை எத்தனையோ, அறப்போர் என்றே
பாராட்டும் படிசெய்தார் மனிதர் யாரும்
       பழுதுறவோ வன்முறையோ செய்தா ரல்லர்.