பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

37




தண்டூன்றும் பெரியார்


தண்டூன்றிப் பெரியார் நடந்தார் - இங்குத்

தமிழ்மாந்தர் தடுமாறித் தாழ்வுக்குள் வீழாமல்
- தண்டு

தொண்டுகிழம் கொண்டாலும் துவளாமல் நின்றார்

தொண்டடிமை செய்தவர்கள் தோள்நிமிர்ந்து வென்றார்
- தண்டு

உயர்ந்தவர் தாழ்ந்தவர் பிறப்பினில் ஓதும்
ஒருசிலர் வாழ்வினை உயர்த்திடும் வேதம்
தயங்குதல் இன்றிஅம் மாயையை வீழ்த்திடத்

தமிழக மாந்தரைத் தட்டியெ ழுப்பிடத்
- தண்டு

சாத்திரக் கோத்திரச் சண்டைகள் நாளும்
சாதிகள் மோதிட மண்டைகள் வீழும்
ஆர்த்தெழும் அய்யாவின் போர்க்குரல் சூழ

அக்குரல் கேட்டதும் ஆரியம் வீழத்
- தண்டு
19-6-79