பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்



மு. கருணாநிதி
முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை - 600 009

நாள் : 7-1-2000


அணிந்துரை

பேரறிஞர் அண்ணா அவர்களால் திராவிட நாட்டின் வானம்பாடி எனப் பாராட்டப் பெற்றும், என்னால் கவிப்பெருங்கோ என அன்போடு அழைக்கப்பட்டும், எக்காலத்திலும் உறுதி குன்றாக் கொள்கைக் குன்றமெனத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசன். அவர் பல கவிதை நூல்களையும் படைத்துத் தமிழ்ச் சமுதாயத்திற்குத் தன்மான உணர்வூட்டியவர். அவரது கவிதைகளில் பல அவருக்குப் பாராட்டுகளையும் விருதுகளையும் தேடித் தந்த சிறப்புக்குரியவை. அவற்றுள் பெரும்பாலானவை நூல் தொகுதிகளாகவும் வெளிவந்துள்ளன.

வாழும் காலத்தில் பல கவியரங்குகளில் தலைமை ஏற்று அவர் பாடிய கவிதைகளும், சில தனிப்பாடல்களும் இதுவரை நூல்வடிவில் வெளிவரவில்லை. அவற்றைத் தொகுத்து, அவர்தம் மைந்தர் திரு. பாரி "ஞாயிறும் திங்களும்' எனும் பெயரில் நூலாக உருவாக்கியுள்ளார். இம்முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.

தமிழ்ச்சமுதாயம் மேன்மை எய்துவதற்குத் தேவையான கருத்துகளைத் தந்தை பெரியார் அவர்கள் வன்மையாகவும், பேரறிஞர் அண்ணா அவர்கள் மென்மையாகவும் கூறிய பாங்கினை எண்ணி, அப்பெருமக்களின் கோட்பாடுகளை வலியுறுத்திடும் கவிதைகளடங்கிய இந்நூலிற்கு "ஞாயிறும் திங்களும்" எனப் பெயர் சூட்டியிருப்பது மிகவும் பொருத்தமானதும், போற்றத்தக்கதும் ஆகும்.

இன்றைய இளைஞர் சமுதாயம் படித்துப் பயன் எய்துவதாகுக.


பெறுநர்

திரு. மு. பாரி,
கவியரசர் முடியரசன் அவைக்களம்,
19, மூன்றாம் வீதி, காந்திபுரம்,
காரைக்குடி - 630 001.