பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ஞாயிறும் திங்களும்


55 ஞாயிறும் திங்களும் நாடாண்ட இனத்தவன்நீ, உலகில் மூத்த நாகரிகத் தமிழ்மொழிக்குச் சொந்தக் காரன் எடாண்ட இலக்கியநூல் ஆயி ரங்கள் ஈங்குண்டு சான்றாக எடுத்துப் பார் நீ! கேடாண்ட நரிக்குணத்தர் சூழ்ச்சி யாலே கீழானாய்! விழித்தெழு நீ! மானம் எங்கே? *பேடாண்ட பிறப்பா நீ? என்று பாடம் கற்பித்த பேராசான் எங்கள் அண்ணன். சாதி என்றும் சமயமென்றும் மேல்கீழ் என்றும் சமனிலைக்கெட் டடிமையென வாழுங் காலை ஆதியில்இங் கில்லாத கருத்தை மாய்க்க அறிவென்னும் படைதாங்கிப் போர்தொ டுத்து, மோதவரும் பகைஎதிர்த்து, வெற்றி கண்டு முன்னேற்றப் பாதைதனில் மக்கள் செல்ல ஒதிவந்த பகுத்தறிவுப் பேச்சால் அன்பால் ஊட்டிவிட்ட இனவுணர்வால் எழுச்சி பெற்றோம்.

  • பேடாண்ட பிறப்பு - பேடி