பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

57


| கழகம் வென்றது | அண்ணா அண்ணா அருஞ்சிறைக் கொட்டிலுள் நண்ணும் நுமக்கோர் நற்செய்தி கூறுவென் கழகம் வென்றது கதிரொளி பரந்தது தொழுதனர் மாந்தர் துயவர் வாழ்த்தினர் காசும் பணமும் காவற் படையும் ஏசும் பேச்சும் இவையே துணையென நின்றனர் எதிரில் நெடுநாள் ஆள்வோர் இடர்பல ஏற்பினும் தொடர்பணி புரிவோர் உடலும் உயிரும் உழைப்பும் துணையெனப் படைபோல் அணிவகுத் துடனெதிர் நின்றனர் கொல்வினைப் போக்கினர் சில்லரை நோக்கினர் சல்லியர் கூடிச் சாடினர் நம்மை அய்யஒ சுமத்தினர் அடாப்பழி ஆயினும் செய்ம்முறை பிழைத்திலர் செந்தமிழ்த் தொண்டர் கழகம் வென்றது கதிரொளி பரந்தது காற்றிற் சாய்வோர் கண்டதை மேய்வோர் துற்றித் திரிவதே தொழிலெனக் கொண்டோர் கோப்பை ஒன்றே குடிபுகும் உலகென மோப்பம் பிடிப்போர் முகங்கவிழ்ந் தேகினர் வஞ்சகர் எத்துணை வாய்ப்பறை சாற்றினும் செஞ்சுடர் வளர்ச்சியைச் சிதைப்பதும் ஒல்லுமோ? கோநகர் தன்னில் மாநகர் மன்றில் வாகை சூடி வளர்ந்தது கழகம் அரியென முழங்கி எரியெனச் சொற்போர் 57