பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞாயிறும் திங்களும்

க. அன்பழகன், எம்.ஏ., தலைமைச் செயலகம் கல்வி அச்சர்மை சென்னை - 600 009. நாள் : 27-12-99 }} கல்வி அச்சர்மை

அணிந்துரை

ஞாயிறும் திங்களும் என்னும் இப்பைந்தமிழ்க் கவிதை நூல் எனது நீண்ட கால நண்பர் கவிப்பெருங்கோ முடியரசன் அவர்கள் பல காலகட்டத்தில் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு ஏடு ஆகும். கவிப்பெருங்கோ என்னும் சிறப்பு விருதுக்குரிய கவிஞர் முடியரசன் அவர்கள், புலவர், ஆசிரியர், கவிஞர் என்னும் தகுதிகளோடு தந்தை பெரியார் ஊட்டிய தன்மான உணர்வுமிக்கவராய்ப் பகுத்தறிவுக் கொள்கையில் தேர்ந்தவராய் வேற்றுமொழி ஆதிக்க எதிர்ப்பினில் முனைந்து நின்று பைந்தமிழ் காத்திடும் கடமையை இளைய தலைமுறையும் மாணவர் உலகும் தெளிந்து ஏற்றிடச் செய்யும் பணியில் அயராது ஈடுபட்டவர்.

தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராகத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் பாரம்பரியம் என்னும் பெருமைக்குரிய கவிஞர்களுள் தலையான இடம்பெறும் மரபுக் கவிஞர் அவர். தமிழ் மக்கள் தன்மான உணர்வு கொண்டு, தலைநிமிர்ந்து, சாதி உயர்வு, தாழ்வு எண்ணத்தை அடியோடு ஒழித்து, மதவேறுபாடுகளை எல்லாம் புறந்தள்ளி நாம் எல்லோரும் ஒர் குலம் என்னும் அடிப்படையில் சமத்துவம் நாட்டி, உடன்பிறப்பு உணர்வு வளர்த்து, சுதந்திரமான சிந்தனை உடையவர்களாய் உயர வேண்டும் என்னும் ஆர்வம் மிக்கவர் கவிஞர்.

அந்தக் குறிக்கோளை நாளும் பரப்பிய தந்தை பெரியாரையும், பகுத்தறிவுச் சிந்தனையை மக்கள் ஏற்குமாறு இதமான வழியில் இயம்பியும் எழுதியும் மக்கள் ஆதரவைத் திரட்டிய ஆற்றல்மிக்க அறிஞர் அண்ணாவையும் எந்நாளும் போற்றிடும் உள்ளங் கொண்டவர் அவர்.

பெரியாரும் அண்ணாவும் வாய்த்திராவிடில் தமிழ்மக்கள எப்படிப்பட்ட மூடத்தனத்தில் மூழ்கி, விழித்தெழாத நிலையில் தாழ்ந்து கிடப்பர் என்பதையும், ஆதிக்க சக்திகட்கு ஆட்பட்ட அடிமை மனப்பான்மை எப்படியெல்லாம் அவர்களை ஒடுக்கி இருக்கும் என்பதையும் தெளிந்தவர். ஆதலின் அவர்தம் கவிதைகள் பலவும் பெரியாரையும் அண்ணாவையும் போற்றியே வரையப்பட்டவை.
"புத்துலகச் சிற்பி" என்னும் தலைப்பில் - நாதியற்றுக் கிடந்துழன்ற தமிழி னத்தை நானிலத்தில் தலைநிமிரச் செய்த கோவே! தீதகற்றும் சொன்மலர்கள் தேர்ந்தெ டுத்துச்

      செந்தமிழிற் பாமாலை தொடுத்து வந்து