பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

63



தாய்மொழிக் காவலர் நற்றலைவர் ஒரமைச்சர் யானோ இந்த நாடறிந்த முடியரசன், அமைச்சர் முன்னே உற்றரசன் பாடுவது புதுமை யன்றோ! உண்மையினில் குடியாட்சி மதிக்கும் பண்பு பெற்றமையால் இப்புதுமை காணு கின்றோம் பெருமைமிகு *தி.மு.க. தலைமை ஏற்க மற்றதொரு பேரரசு வணங்கி நிற்க மாறிவரும் காலத்தைப் படைத்து விட்டோம். தமிழ்மொழியின் தவமகனை, நாடு காக்கும் தலைமகனைத் தனிமகனைக் காஞ்சி தந்த அமிழ்தனைய பெருமகனைப் புகழ்து பாட அறியாத நாவென்ன நாவே! கண்ணின் இமையனையான் மெய்ப்புகழைக் கேட்டு வக்க இயலாத செவியென்ன செவியே! அன்பால் தமையனெனும் அவன்வந்து பிறந்த ஞான்றே தமிழ்சிறந்து தனிப்பெருமை கொள்ளக் கண்டோம். கற்கண்டோ சர்க்கரையோ கரும்பின் பாகோ கணிபிழிந்து வடித்தெடுத்த இனிய சாறோ சொற்கொண்டல் பொழிமழையோ கவிஞன் தந்த சுவைமிக்க அணிமிக்க கவிதை தானோ முற்கண்ட யாழ்தந்த சுவையோ என்ன முத்தமிழின் நடையழகை எழுதிக் காட்டிக் கற்கஒரு பரம்பரையைத் தோற்று வித்துக் கனிமொழிக்குத் தமிழ்மொழிக்கோர் புதுமை செய்தான். நஞ்சுமிழும் பாம்பினையும் மயங்க வைத்து நடம்பயிலச் செய்கின்ற மகுடி தானோ நெஞ்சமெலாம் வயப்படுத்திக் களிப்பில் ஆழ்த்தும் நெடுங்குழலாம் நாதசுரக் கருவி தானோ கொஞ்சுதமிழ் மாமழையோ அருவிக் கூட்டம் கூடியதோ ஆற்றொழுக்கோ எனவி யந்து வஞ்சகரும் மறைந்திருந்து நயந்து கேட்டு வாய்மலரும் அவன்பேச்சைப் புகழ்ந்து ரைப்பர்.

  • தி.மு.க. - திருவாரூர் மு.கருணாநிதி