பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஞாயிறும் திங்களும்



புரியுமொழி புரியுமொழி எனப்பு லம்பிப் புன்மொழிகள் பலகலந்து பேசு வோர்தம் திரிபுடைய மனப்போக்கை மாற்றி விட்டான் தெளிவுடைய தமிழ்மொழியா புரிய வில்லை ? தெரியவிலை உமக்கென்றால் மனத்தின் குற்றம் தெள்ளுதமிழ்த் தாய்மொழியின் குற்ற மன்று உரிமையினை மறந்தமையால், அடிமை நெஞ்சம் உற்றமையால் உமதுமொழி விளங்க வில்லை. இன்றதுதான் புரியவிலை என்றால் நாளை எளிதாகப் புரிந்துவிடும் உங்கள் மக்கள் நன்றெனவே புரிந்திடுவர் ஆத லால்நீர் நலங்கெடுத்துப் பிறமொழிச்சொல் கலத்தல் வேண்டா என்றுமுயர் தனிமொழியைக் குழப்பி விட்டால் இளைஞரெலாம் இகழ்வரென இடித்துக் கூறி நன்றுணரும் பேரறிஞன் தாய்மொ ழிக்கு நலங்காக்குங் காவலனாய் விளங்கு கின்றான். சாவென்றால் ஒருமுறைதான் நம்மைச் சாரும் சாய்ந்தபினர் மறுமுறையும் உயிரை யிங்கு வாவென்றால் வாராது, போகும் அந்த வறியவுயிர் தாய்மொழியைக் காப்ப தற்கே தாவென்றால் தந்திடுவேன் தயக்கங் கொள்ளேன் தமிழ்நாடு தனைக்காப்பேன் என்று ரைத்த நாவென்றான் வாய்மொழியை நினைந்து பார்க்கும் நாளெல்லாம் உடல்சிலிர்க்கும் உயர்சி லிர்க்கும். செந்தமிழ்க்குத் தீங்கென்றால் அரசி ருக்கை சிறிதெமக்குப் பெரிதன்று தாய்மொ ழிக்கு நொந்திருக்கும் நிலைவந்தால் பொறுக்க மாட்டோம் நொடிப்பொழுதில் துச்சமென உதறி விட்டு வந்திருப்போம் போர்தொடுப்போம் தமிழ்மொ ழிக்கு வாழ்வுதரச் சிறைபுகுதத் தயங்க கில்லோம் வெந்துயர்க்கும் அஞ்சகிலோம் வாழ்வும் சாவும் விளையாட்டென் றெண்ணிடுவோம் பகைமு டிப்போம்.