பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

5


காதலுற்று நின்னடிக்குச் சூட்டு கின்றோம்
கைதொழுது வாழ்த்துகின்றோம் எமது நெஞ்சில்
கோதகற்றும் பகுத்தறிவை இன்னும் ஏற்று!
கொடுமைகளை எதிர்க்கின்ற துணிவும் ஊட்டு!

என்று பாடியுள்ள வரிகள் கவிஞரின் ஆர்வத்தைக் காட்டும். "காஞ்சிக் கதிரவன்' என்னும் தலைப்பில் -

பகுத்தறிவுப் பெருங்கடலுள் முளைத்து வந்த
பகலவனை, அறியாமை இருட்க ணத்தைச்

செகுத்தொழிக்கும் பரிதிதனை, துயிலை நீக்கச்
சிவந்தெழுந்த சூரியனை, அரசி யல்வான்
தகதகக்கப் பண்பொளியைப் பாய்ச்சி எங்கள்
தமிழ்செழிக்கக் கிளர்ந்தெழுந்த செஞ்ஞா யிற்றை

உகப்புடனே தமிழரினம் மலர்ந்து தோன்ற
உதித்தெழுந்த கதிரவனை வாழ்த்து கின்றேன்

அண்ணாவின் வரவு செங்கதிர் வரவெனத் தமிழின விழிப்புக்கும் வாழ்வுக்கும் வழியானதைப் பாடியுள்ளார் கவிஞர். நம்மை அரவணைத்து வழிநடத்திக் கழகம் காத்துக் களம் பல கண்டு வாகையும் சூடிய அறிஞர் அண்ணா இல்லாத நிலையில் கழகத்தைக் காத்திடவும் ஒல்லுமோ எனக் கலங்குவார்க்கு, அண்ணன் கூறுவதாகக் கவிஞர் வரைகிறார். இப்படி -

அந்தக் கழகத்தை ஆரழிக்க வல்லார்கள்?

சிந்தைத் துயர்நீங்கிச் செம்மாந்து நிற்பாய்! இரங்கும் இயல்புடைய என்றன் மனத்தை இரவல் எனப்பெற்றான் என்தம்பி ஆரூரன்; நம்மை உருவாக்க நாளெல்லாம் பாடுபட்ட செம்மை திறம்பாத ஈரோட்டுச் சிங்கத்தின் நெஞ்சத் துணிவும் நிரம்ப அவன் பெற்றுள்ளான் அஞ்சற் கிடமில்லை அன்னான் துணையாய்நில்!

இப்படிப்பட்ட உணர்வுடன் வாழ்ந்து, வளர்ந்து, பிறரையும் வளர்த்து புகழினால் ஒளிரும் கவிஞர் - திராவிட முன்னேற்றக்கழகம் ஒன்றே அண்ணா வழியில் அயராது நடைபோடும் ஆற்றலுடையதாவதைப் பலகாலும் பாடியுள்ளர். அவரது கவிதை எந்நாளும் முழங்குவதாகட்டும் வாழ்க முடியரசன் புகழ்!

(க.அன்பழகன்)