பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

69



தாக்கவந்த சட்டம் தலைதுாக்க மாட்டாமல் ஆக்கிவைத்த ஆற்றல் அறிவுளார் போற்றுகின்றார் குட்டிக் கலகங்கள் கோள்மூட்டல் அங்குமிங்கும் எட்டிப் பிடித்தே இறுகமுடி போடல்என நாளெல்லாம் ஆடிவரும் நாரதர்கள் கூடிஒரு கேளல்லார் தம்அணைப்பில் கேடு விளைத்தார்கள். பேசா தனபேசிப் பேயாட்டம் ஆடிவந்தார் ஏசா தனவெல்லாம் ஏசி எழுதிவந்தார் கூடிக் களிங்குங்கால் கோமான் புகழொன்றே பாடிப் பிழைத்தவர்கள், பண்பாளன் கால்களையே ஒடிப்பிடத்தவர்கள் ஊர் ஊராச் சென்றுபல சாடிப் பழித்தார்கள் சாகும் கழகமென ஆடிக் களித்தார்கள் ஆகாத கூட்டுறவைத் தேடிப் பிடித்தார்கள் தேய்பிறைபோ லானார்கள் சட்டமென வந்த தடையாம் புறப்பகையால் எட்டுணையுங் கேடின்றி ஏற்றமிகு நம்அறிஞன் காத்த கழகத்தைக் காழ்ப்பு மிகுதியினால் வாய்த்த அகப்பகைதான் வாடிடச் செய்திடுமோ என்றஞ்சித் தொண்டரெலாம் ஏங்கி யிருக்குங்கால் நன்றெண்ணிச் செய்தான் நயவஞ்சப் போக்கெல்லாம் சென்றொழியச் செய்தான் சிறுமைப் பகையனைத்தும் வென்றுமலர் வாகை விறல்மாலை சூடிநின்றான் ஆண்டுபல வாக அரசிருக்கை வீற்றிருந்தே ஆண்டிருந்தோர் தம்மை அசைப்பதற்கு யாருமிலர் என்ற செருக்காலே எக்காள மிட்டவர்கள் நின்று தடுமாறி நெடுமூச்சு வாங்கவைத்தான் நாகம் படர்ந்திருக்கும் நச்சுப் பெருமரத்தை வேகப் புயலாகி வேரோடு சாய்த்துவிட்டான் சாடும் புயலாகிச் சங்காரம் செய்தபினர்ப் பாடுமிளந் தென்றலெனப் பாராண்டு நிற்கின்றான் மக்கள் நலங்காத்து மாநிலத்தார் நெஞ்சமெலாம் புக்கிருந்து வாழ்ந்து பொலியும் உயிராகி, மாந்தர் உயிரானால் மன்னுயிர்கள் அத்தனையும் ஏந்தும் உடலாகி ஈடின்றி ஆள்கின்றான் காக்குந் தொழில்வல்லான் காட்டும் நெறிகடத்தல் பார்க்கும் நலமென்பேன் யான். 29-9-1968