பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

71



சார்ந்தாரை வாழ்வித்துத் தன்போல் வளர்த்துவிடத் தேர்ந்தானைப் பல்லாண்டு வாழ்கவெனச் செப்புகின்றேன் கற்றுணர்ந்த நல்லோர்பால் கானுந் திறமையினை உற்றுணர்ந்து போற்றிவரும் உள்ளத்தை வாழ்த்துகின்றேன் பேராற்றல் வாய்ந்த பேராயக் கட்சியினைப் போராட்டத் தேர்தலிலே பொன்றிவிழச் செய்திடினும் வெற்றிக் களிசிறிதும் வேண்டாப் பெருந்தன்மை உற்றதொரு நற்பண்பை உள்ளூறிப் பாடுகின்றேன் தொண்டரெலாம் தம்பியராத் தோள்தந்து காக்குமுளம் கொண்டொழுகும் அன்புளத்தைக் கோடிமுறை வாழ்த்துகின்றேன் தந்தை பெரியாரும் தந்நலத்தை நாடிகளும் தந்த வசைமொழிகள் தாங்கும் இதயத்தை அண்ணன் குடும்பத்தை ஆணவத்தார் கூறிவந்த புன்மொழிகள் யாவும் பொறுத்திருக்கும் நெஞ்சுரத்தைக் கோடி முறைசொல்லிக் கோவில்கட்டிக் கும்பிட்டுப் பாடி முடித்தாலும் பாட்டில் அடங்காது நேரு பெருமகனார் நீண்ட ஒருசொல்லைக் கூற மனந்துணிந்தார், கொற்றமிகு காளையர்கள் சீறி எழுந்தார்கள், சிந்தனையில் செந்தமிழில் ஊறிவரும் நெஞ்சத்தான் ஒன்றுரைத்தான் தம்பியர்க்கு நம்மிற் பெரியவர் தாம் நம்மைப் பழித்துரைத்தார் விம்மாதிர் மன்னிப்போம் விட்டு மறந்திருப்போம் என்று மொழிந்த இனிய குணத்தானை நின்று வணங்கி நெடுங்காலம் வாழ்த்திடுவேன் நம்மிடையே வாழ்ந்து நலம்பெற்று வாழ்வுயர்ந்து தம்பி நிலைமாறித் தாவிவிட்ட ஒர்நடிகர் எங்கிருந் தாலுமவர் வாழ்க எனவாழ்த்திப் பொங்கிமொழிந்த ஒருபொன்மொழியை வாழ்த்துகின்றேன் அன்புளத்தின் ஆழம் எவரும் அறியாத தென்புலத்தான் வாழ்க சிறந்தது. 29-9–1968