பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

ஞாயிறும் திங்களும்


| அண்ணா வருக | அண்ணா வருக! அறிவே வருக! கண்ணே வருக! கனியே வருக! பண்பே வருக! பணிவே வருக! அன்பே வருக! அறமே வருக! முதல்வா வருக! முத்தமிழ்த் தாயின் புதல்வா வருக! புண்ணியா வருக! தாயெனத் தமிழகம் தாங்கும் நினக்கு நோயென ஒருசொல் நுவன்றனர், அச்சொல் தணியாத் துயரைத் தந்திட நொந்தேன் இனியாய் நினக்கோ இந்நிலை நேர்ந்ததென் றேங்கி ஏங்கி இடர்தனில் வீழ்ந்தேன் தாங்கிய துயரம் சாற்றுதற் கரிதே நாட்டின் நிலையும் வீட்டின் நிலையும் வாட்டிட நாளும் வதங்கிடும் என்மனம் நாட்டின் தலைவன் நலிவுற் றானெனக் கேட்டுத் துடித்துக் கிடந்தது துவண்டது பைந்தமிழ் பாடிப் பழகுமென் நாவும் வெந்துயர் பொறாஅது வேதனைப் படலால் பாடல் மறந்து பாழ்த்துக் கிடந்தது வாடல் தவிர்த்திட வந்தனை தலைவா! வருகஎம் தலைவா! வாழிய நெடுநாள் தருகசொல் லமிழ்தம் தலைவா வாழிய! புல்லிய கொடுநோய் போக்கிய வல்லவர் மில்லர் எனும்பெயர் மேவிய நல்லவர் அமெரிக்க ராயினும் ஆருயிர் காத்தலால் தமரெமக் காயினர் தமராம் அவரைப் பொங்கும் உளத்தாற் போற்றதும் யாமே எங்கள் தோழரென் ரேத்துதும் யாமே குடர்ப்புண் தீர்த்தனர் குலவிடும் எங்கள் இடர்ப்புண் தீர்த்தனர் இனியராம் எமக்கே நலமுற வந்தள நல்லோய் வணக்கம் இளகிய மன்மும் இனியநன் மொழியும் குலவிய தலைவா கூர்மதி யுடையோய் வாழிய நெடிதே வாழிய இனிதே. (அமெரிக்க நாடு சென்று நலம் பெற்றுத் திரும்பிய அண்ணாவுக்கு எழுதிய வரவுரை. 6-11-1968)