பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

ஞாயிறும் திங்களும்



விடுதலைநாள் சுதந்திரத்தின் திருநாள் தன்னை வீரத்தின் தியாகத்தின் திருநாள் என்றாய் அடிமையென ஆக்கிவைத்தோர் கணக்கைத் தீர்த்த அரியதொரு நாளென்றாய் நாற்பத் தேழை உடைமைஎன வரவேட்டில் கணக்குப் பார்க்கும் உவகைமிகு நாளென்றாய் அறுபத் தேழை கடமையினை நன்கியற்றி நின்றோய்! ஏனோ கணக்கொன்றும் பாராது மூடி விட்டாய் ? பெரும்புரட்சிக் கருத்தெல்லாம் பேசி நிற்பாய்! பேச்சொன்றே கேட்டிருந்தோர் அஞ்சி, நின்னை இரும்புளத்து மனிதனென எண்ணி நாட்டில் ஏதேதோ விளைந்துவிடும் என்றி ருந்தார் கரும்புளத்து மென்மையினை மேன்மை தன்னைக் காட்டினைநீ குடியாட்சிப் பண்பு காட்டி பெருங்குணத்தைக் கண்டபினர் அஞ்சி நின்ற பேனாரும் நின்நட்பை விழைந்து வந்தார் அரசியலைத் திறமுடனே நடத்த வல்லார், அண்ணாநீ தோற்றுவித்த கட்சி தன்னை உரமுடனே வளர்க்கவல்லார் தோன்ற லாகும் உன்போலப் பாசத்தை வளர்த்துப் போற்றி அரவணைக்க வல்லாரை என்று காண்போம்? அண்ணாவென் றுறவுமுறை சொல்லிச் சொல்லி உரிமையுடன் அழைத்திடயாம் எவர்பாற் செல்வோம்? உனைநினைந்தே நாளெல்லாம் உருகு கின்றோம். படிப்படிநீ உழைத்துழைத்து மேலே சென்றாய்! பாராளும் நிலைபெற்றாய்! அதைப்போல் இன்றும் படிப்படியா வுயிர்த்துயிர்த்து மேலே சென்றாய்! பாடல்களில் நிலைபெற்றாய் சிலையும் பெற்றாய்! அடிப்படையை இழந்ததனால் ஆடி நிற்கும் அரண்மனையாய்த் தமிழ்நாடு மயங்கி நின்று துடிப்படையச் செய்துவிட்டாய்! எங்கள் கோவே தொண்டெல்லாம் முடிந்ததென்றா முடித்தாய் வாழ்வை.