பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

77



எழுத்தெனினும் பேச்செனினும் சலிப்புத் தோன்றின் எழுதுவதைப் பேசுவதை நிறுத்து கென்று பழுத்துயர்ந்த பட்டறிவால் தம்பி யர்க்குப் பகருவைநீ நின்வரவால் களிப்பே யன்றி வழுத்துதலுக் குரியவனே சலிப்பே யில்லை வருமூச்சை நீஎதற்கு நிறுத்திக் கொண்டாய் எழுத்துலகம் பேச்சுலகம் என்றும் நின்னை எதிர்நோக்கி நிற்பதைநீ அறியாய் கொல்லோ? பண்ணாலுன் அருட்புகழைப் பாடு கின்றேன் பணிகின்றேன் மலரடியை நின்ப டத்தைக் கண்ணார மனங்குளிரப் பார்த்துப் பார்த்து கண்ணிர்கொண் டாட்டுகின்றேன் கருணை வாழ்வே! எண்ணாத நாளொன்று வாழ்வில் இல்லை இனியதமிழ் வளர்ப்பதிலே உன்னைக் காண்பேன் அண்ணாஎன் கவிமலரைத் துவி நின்றே அடியிணையைத் தலைதாழ்த்தி வணங்குகின்றேன்.