பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ஞாயிறும் திங்களும்


 "துற்றாதீர் பிறர்பழியை, மேடை ஏறித் தொடுக்காதீர் வசைமொழியைக் காசுக் காக மாற்றா தீர் தமிழ்மரவை, கருத்தை மட்டும் மறுத்துரைப்பீர், தனிஒருவர்ப் பழித்தல் வேண்டா, மாற்றாரின் தோட்டத்து மல்லி கைக்கும் மணமுண்டு தெரிந்ததனை நுகர்க" என்று சாற்றிஒரு பண்புவழி காட்டி நின்று தமிழினத்தை வளர்க்கும்வழி உணர்த்தி நின்றார். புரட்சிவழி எனச்சொல்லி உணர்ச்சி யூட்டிப் புன்மைவழி அமைக்கவில்லை ; மக்கள் நெஞ்சில் மருட்சிபெறச் செய்யவில்லை, பகைத்தோர் கூட மனதுக்குள் ஏற்கின்ற வழியே சொன்னார், கருத்துவழி, அறிவுவழிப் புரட்சி செய்தார்; களப் புரட்சி கொலைப்புரட்சி செய்தா ரல்லர்; தரத்திலுயர் புரட்சிவழி, தன்னைத் தானே தருகின்ற அறத்துவழி ஒன்றே கண்டார். அண்ணாவின் வழியில்தான் செல்லு கின்றோம் அல்லல்பல வந்தாலும் அயர மாட்டோம் ; புண்ணாகப் பழிமொழிகள் வீசும் போதும் பொழுதெல்லாம் சோதனைகள் வந்த போதும் மண்ணாலும் உரிமையினைக் கலைத்த போதும் மனைமக்கள் தமக்கிடர்கள் விளைத்த போதும் எண்ணாத சிறைக்கூடம் வதைத்த போதும் எந்நாளும் உழைத்திருப்போம் வெற்றி கொள்வோம். அடிவயிற்றில் எமைமிதித்துக் கொன்ற போதும் அவர்காட்டும் வழியல்தான் செல்வோம் நாங்கள் அடிபட்டு மிதிபட்டுத் துயர்கள் உற்றும் அயராமல் உழைத்திடுவோம், இரண்டு வண்ணக் கொடிகட்டி அதன்நிழலில் தொடர்ந்து நின்று குறிக்கோளை நோக்கித்தான் பயணம் செய்வோம் மடியட்டும் எமதுயிர்கள் அஞ்ச மாட்டோம் மறிக்கட்டும் எமைப்பகைகள் விலக்கிச் செல்வோம்.