பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எனக்குப்பின்.... "திராவிட நாட்டின் கவிஞன் முடியரசன்.” வானம்பாடி கவிஞர் முடியரசன்” -பாவேந்தர் பேரறிஞர் பாரதிதாசன். அண்ணா. . 3. 3. o --- "தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற மான்துள்ளும் வேகத்தைக் கவிதையினால் வான்பெய்யும் கோடைமழைபோலப் பொழிகின்ற முடியரசர் முன்னாள் தொட்டு இந்நாள்வரை இருக்கின்ற நம்கவியரசர்" ... 輩

  • "தன்மானக்குன்றம் - கொள்கை மாறாச்சிங்கம் - திராவிட இயக்கத்தின்

முன்னோடிக்கவிஞர்-திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் - 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கு மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிற தென்றால். அன்று முடியரசன் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்". - முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி. "பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி". " புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் முடியரசன்" - - அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன். * மும்முடியை ஒருதலையில் முடித்த முடியரசர் எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர் தம்மரிய கவிதையினால் கவியரசரானார் தாய்த்தமிழே அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார். -கவிஞர் கண்ணதாசன் 曹