பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9

களார், ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், தமிழ்த்தென்றல் திரு.வி.க., தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் தருமாம்மாள், கலைஞர் கருணாநிதி உட்பட பலரும், மங்கையர் இனம், பெண்கள் சமுதாயம் மேன்மை பெற தங்களது வாழ்நாள் முடிவுவரை அயராது அரும்பாடு பட்ட. பெருமக்கள் ஆவார்கள் என்பதிலே இரண்டு கருத்துக்கு இங்கே இடமில்லை எனலாம், இருந்தும் தமிழகத்தில் இரு பெண்மணிகள் பெண்ணுரிமைப், போராட்டல் பணியாற்றியதில் கண்ணின் மணியெனக் குறிப்பிடத்தக்கப் பெருமை பெற்றவர்கள் ஆவர்.

யார் அந்த இரு பெரும் பெண்ணுலகச் சேவையாளர் கள் என்று கேட்பீர்கள்; அவர்களுள் ஒருவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார்; மற்றவர் மூவாலூர் பெரு மாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஆவார்!

இராமாமிர்தம் அம்மையார் பற்றி ஒரு தனி நூலே எழுதலாம்; ஆனால், நாம் இங்கே டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் அவர்கள் வாழ்வும், பெண்ணுரிமைக்காக அவர் செய்த சீர்திருத்தச் சேவைகளையும் மட்டுமே பார்ப்பாேம்!

2. பெண்கன் நாட்டின் கண்கள்!

மனிதப்பிறவி எடுத்தவர் எல்லாம் மக்கள் ஆகார்!. அம்பிறவிகளுள்ளே செடிகளுண்டு, மரங்கள் உண்டு; கல்லுண்டு; மரமுண்டு; பாம்புண்டு; பறவைகளுண்டு; விலங்குகள் உண்டு! அவர்கள் அனைவரும் மக்களாக மாறிட முயற்சி செய்தல் வேண்டும்! முயற்சி உயர்ச்சி தரும் தரும், அல்லவா?

எனவே, உடல் ஒருவித விளக்கு உயிர். அறியாமை என்ற பேரிருளில் மூழ்கிக் கிடப்பது; கொஞ்சம் கொஞ்ச

மு-1