பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டிர் ஆதிது லட்கமியின்

அமெரிக்க மருத்துவரின் சிகிச்சையால் சந்திரம்மாள் உயிர் மீண்டார். இந்த இடைவெளியில் தான்ும் ஒரு டிாக்ட்ராக ஆகவேண்டும் என்ற ஊக்கமும் எண்ணமும் ஆவருக்கு அதிகமாயிற்று

இந்த வேளையில், தந்தையார் நாராயணசாமிபிடிம் கல்வி கற்ற பழைய மாணவரான சீனிவாசராவ் என்பவர், புதுகோட்டைக்கு வத்தார். அவரிடம் சென்னை மருத்துவ கல்லூரியில் தனது மகள் முத்துலட்சுமியைச் சேர்ப்பதற்கு உரிய விவரங்களை அவர் கேட்டறிந்தார். அந்த மான வர், தான்் முன்னிருந்து அதற்கான எல்லா உதவிகளையும் செய்வதாகக் கூறினார்,

அதனால், தாராயணசாமி, 1907-ம் ஆண்டில், மகளை மருத்துங்க் கல்லூரியில் சேர்ப்பதற்காக முத்துலட்சுமி யுடன் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்; அங்கே பழைய மாணவர் சீனிவாசராவ் உதவியால் தனது மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.

சேன்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் தங்கிப் படிப்பதற்குரிய பெண்கள் தங்கும் விடுதி கிடிையாது. ஆகையால், தனியாக ஒரு வீட்டைப் புரசைவாக்கம் பகுதியில் வாடகைக்குப் பர்ரித்து, அதில் மகளும் தான்ு மாகத் தங்கினார்கள்.

நாராயணசாமி எப்போதாவது ஒரு முறை புதுக் கோட்டைக்குப் போலா.ே அப்போது அவருடைய நண் பரும், வீட்டுக்காரருமான கிருஷ்ணசாமி என்பவர், முத்து லட்சுமிக்கு தந்தையைப்போல இருந்து பாதுகாத்து வந் தார், அடுத்த சில மாதங்களில் சந்திரம்மாளும் தம்பி தங்கைகளும் புதுக்கோட்டையிலே இருந்து சென்னைக்கே வந்து தங்கிவிட்டார்கள்.

முத்துலட்சுமியின் தம்பி சாமையா சென்னை கிறிஸ் தவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்க்கப்பட்டார்.