பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் உலகப் பேரறிஞர்கள் பலரது கருத்துக்களையும், கண்டுபிடிப்புகளையும் தொகுத்து எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்த நூலின் வரிசையில் டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் பெண் கல்விக்காக பாடுபட்டதையும், தேவதாசி முறையை ஒழிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், புற்று நோய் கொடுமையை ஒழிக்க அவர் ஆற்றிய நற்செயல்களையும் மிக அருமையாக தொகுத்து அளித்துள்ளார் புலவர் என். வி. கலைமணி அவர்கள். டாக்டர் முத்துலட்சுமி பின் தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்ற இந்நூலை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். அனைவரும் தவறாமல் படித்து பயன் பெற வேண்டுகிறோம்.

- பதிப்பகத்தார்