பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

7

னுடன் அழைத்துக் கொண்டு பயணம் சென்று. அக்கால மூடநம்பிக்கையாளர்களுக்குப் பாடம் புகட்டினார்!

1872-ம் ஆன்டில் பிரம்ம சமாஜ் சட்டம் என்ற ஒரு சட்டம் அமுலானது. அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒருதாரம் மணம் நடப்பதும், கலப்பு மணம் செய்து கொள்பவர்களுக்கும் அச்சட்டம் மூலமாக சட்ட ஆதரவும் கிடைத்தது.

ஜெம் ஷெட்ஜி என்ற ஒரு சமுதாய முன்னேற்றச் சீர்திருத்தச் சிற்பி, பெண்களுக்கு ஆங்கிலக் கல்வி அவசியம் என்பதை வற்புறுத்தி அதற்கான பல கல்வி நிலையங்களை ஆங்காங்கே துவக்கிப் பென் கல்வி ஆர்வத்துக்கு ஆணிவேராக விளங்கினார்!

கோஷா என்ற இஸ்லாமியப் பெண்களும், ரஜபுத்திர பென்களும், ஜைன மதத்தைப் பின்பற்றிடும் மகளிரும், மார்வாடி, மரபு மங்கையர்களும் பர்தா என்ற முக்காடு பாேட்டு; அவர்களது இயற்கையான அழகை மறைத்து வந்தார்கள்.

துருக்கி நாட்டில் இருந்த பர்தா பழக்கத்தின் மரபை; கமால் பாட்சா என்ற ஒரு சீர்திருத்தவாதி அகற்றியதைப் போல, இந்தியாவிலும் பக்ருதீன் தவாப்ஜி என்பவர் அந்த பர்தா அணியும் வழக்கத்தை அகற்றினார்.

மகரிஷி கார்வே என்ற ஒரு கல்விமேதை, பெண்களுக்கென்று தனியான ஒரு பல்கலைக் கழகத்தை 1916-ம் ஆண்டில் ஏற்படுத்தி பென், கல்வி கற்பது மட்டும் போதாது, அவர்கள் கல்வித் துறைகளில் பட்டதாரிகளாகவும் வர வேண்டும் என்று முதன்முதல் ஒரு பல்கலைக் கழகத்தை ஆவர் நிறுவிக் காட்டினார்.

பெண்கள் பூப்பெய்திய பிறகுதான், அவர்களுக்குத் திருமணமே செய்யவேண்டும் என்ற திட்டத்தை முதன்