பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 / வயலூர் சண்முகம்


மருகன் முத்துவை தாஜா செய்து
முருகன் கோவிலில் சத்தியம் வாங்கித்
திருத்தப் பார்த்தாள்! தினமும் கழனியில்
ஒருவேளை யாவது உழைக்கச் சொன்னாள்!

"பாழுங் கிழமே! பார்வதி முண்டமே!
கூழாங் கல்லும் குத்தும் முள்ளும்
தாழைப் புதரும் நிறைந்த கழனியில்
கூழுக்கு உழைக்க என்னையா பார்த்தாய்?

பட்டினம் போகிறேன்! படத்தில் நடிப்பேன்!
பொட்டைக் காட்டில் மூக்கன் பட்டியில்
அட்டையாய் ஒட்டிக் கிடக்கவே மாட்டேன்!
சட்டை கசங்காமல் சம்பா திப்பேன்!

என்றே ஓர்நாள் இரைந்து கத்தி;
தின்ற இட்லியைத் தெருவில் எறிந்து
கன்றுக் குட்டியைக் காலால் உதைத்துச்
சென்று விட்டான் திருந்தா முத்து!

பாசமாய் வளர்த்துப் பாது காத்தே
மோசம் போனவள் மூன்றுநாள் அழுதாள்!
"நாச காலன், தொலைந்தான் போடி!
மாசம் இரண்டு கலங்கள் மிச்சம்!