பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20 / வயலூர் சண்முகம்

என்றெலாம் ஏதோ சொல்ல வந்தவன்
நன்றாய் முத்துவின் முகத்தைத் தடவி
அன்றைக் கொருநாள் அவனிடம் கேட்ட
'ஒன்றை' அவனது இடுப்பில் பார்த்தான்!


ஃபேஷன் மிகுந்த ஹாங்காங் 'பெல்ட்' அது!
ரேஷன் சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்!
ஃபேஷன் 'பெல்ட்'டை வாங்கிக் கொண்டான்!
ஸ்டேஷனில் டிக்கட்டும் வாங்கிக் கொடுத்தான்!


சினிமாப் பைத்தியம் சிதறி ஓட
தனிமையில் முத்து ரயிலில் அழுதான்!
பனியூரில் உள்ள அவனது மாமா
தணிகா சலத்தின் நினைவு வந்தது!


பாதி வழியில் ரயிலை விட்டே
ஏதோ நினைவில் இறங்கிக் கொண்டான் !
நாதி யற்றவனாய் ஆனதை எண்ணி
பீதி அடைந்தான் !பிரமை அடைந்தான்!


போதை தந்திடும் 'ஃபாரின் சிகரெட்'டை
காதகன் பஞ்சு வாங்கிக் கொடுத்து
மீதி இருந்த பணத்தொடு ஓடிய
வேதனை யாலே முத்து துவண்டான்!