பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 / வயலூர் சண்முகம்

அவரவர் வயது; திறமை; ஆற்றல்கள்
இவைகளுக் கேற்ப யாவரும் நாளும்
தவறாமல் உழைத்தே சாப்பிடு வதுதான்
அவசிய மானக் கடமை என்பார்!


ஆசிரியர் பெற்ற மக்கள் ஐவர்!
காசைப் பணத்தைப் பெரிதாய் என்றும்
பூசிப்பவர் அல்லர்! புத்திரர் களையே
மாசிலாத செல்வங்களாய் மதித்து வந்தார்!


பைங்கிளி, அன்னம் இருவரும் பெண்கள்!
ஐயன் திருவடி, அழகு நம்பி;
மெய்கண்டான் மூவரும் பிள்ளை களாவர்!
நெய்போல் குணங்களும் நிறங்களும் கொண்டோர்!


தெய்வ நாயகி அவரது துணைவியார்!
பெய்யும் மழைபோல் பேருளங் கொண்டவர்!
எய்யும் அம்புபோல் சுறுசுறுப் புடையார்!
கை, கால் அசத்தினும் களிப்புடன் உழைப்பவர்!


பெண்கள் இருவரும் பிள்ளை களோடே
கண்க ளான கல்வி பெற்றவர்!
எண்ணிலும் எழுத்திலும் வித்தகம் உள்ளவர்!
தண்ணளி என்னும் தயைமிக நிறைந்தோர்!