பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘டானா' முத்து / 25

பாடம் படித்தும்; பாட்டு கற்றும்
ஆடல் பயின்றும்; அம்மாவின் பணிகளில்
கூட இருந்து உணவு ஆக்கியும்
வீடு மகிழ விளங்கினர் பண்பால்!

மூத்த பிள்ளை ஐயன் திருவடி
தோத்திரம் திருக்குறள் அருமையாய்ப் பாடுவான்,
மாத்திரை, மருந்து என்பதே அறியான்!
காத்திர மான கட்டுடல் கொண்டோன்!

கூட்டுறவு நிறுவனம் ஒன்றில் எழுத்தனாய்
ஏட்டுக் கணக்குகள் எழுதி ஊதியம்
மேட்டிமை யாகப் பெற்ற போதும்
வீட்டுறவில் அவனால் மகிழ்ச்சியே என்றும்.

அந்த ஊரின் அருகே தோன்றிய
கந்தன்நகர் என்னும் காலனி ஒன்றில்
பிந்திய பிள்ளை அழகு நம்பித்
தந்தையைப் போல ஆசிரியராய் இருந்தான்!

பின்னவன் மெய்கண்டான் ஓர்விவ சாயி!
செந்நெலும் கன்னலும் அவனது ஜீவன்!
பண்ணை ஒன்றைக் குத்தகை எடுத்து
மண்ணைப் பொன்னாய் ஆக்கி வந்தான்!