பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'டானா முத்து /29

அஞ்சு நிமிசம் அந்தண்டை போனேன்!
இஞ்சே இருந்ததை எல்லாம் திருடி பஞ்சைப் பயஇவன் முழுங்கிப் புட்டான்! நெஞ்சை உடைக்கணும் ரௌடிக் கழுதையை"!
                                
கிழவி அலறி மீண்டும் பாய்ந்தாள்! அழகு நம்பி அடக்கினான் மீண்டும்! பழங்கள் மிட்டாய்களைப் பசியால் திருடி முழுங்கியதைப்'பையனும் ஒப்புக் கொண்டான்.
                        
பையன் உண்மையை ஒப்புக் கொண்டதும் கையைப் பிசைந்து; தலையைக் கவிழ்த்து
"ஐயா! மன்னியுங்கள்” என்று சொல்லி
மெய்நடுங்க அழுததும் நம்பியை உருக்கின!

பையன் தின்ற பண்டங் களுக்காகக் கைப்பணம் ஐந்து ரூபாய் கொடுத்தான்! “வையாதே கிழவி பாவம் பசியால் செய்து விட்டான்!” என்றான் நம்பி!

அடுத்த நிமிடம் கதறி விம்மி நெடுஞ்சாண் கிடையாய் நம்பி காலில் “படீ'ரென்று விழுந்தான் அந்தப் பையன் கொடுத்துக் காத்தக் கைகளை வணங்கினான்!