பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30 / வயலூர் சண்முகம்



“நிசமாய் எனக்கு நீங்கள்தான் தெய்வம்!
வசமாய் கெட்டு அனாதையாய் ஆனேன்!
பசியால் திருடிய பாவமும் செய்தேன்!
உசிரைக் காக்க மானம் இழந்தேன்!”


இப்படிக் கூறி இன்னும் ஏதோ
செப்பிய அவனைச் சேர்த்தே அணைத்தே
"தப்பை நீ உணர்ந்ததே தண்டனை யாகும்!
அப்பாநீ யாரென?" அவனைக் கேட்டான்!


அந்தப் பையன் சொன்ன கதைகள்
விந்தையாய் நம்பியை வியக்க வைத்தன!
அந்தரங் கமாக அவனிடம் பேசி
சொந்த சைக்கிளில் ஏற்றிக் கொண்டான்!

******

6


நேரம் கழித்து வீடு வந்த
காரணம் கேட்க அழகு நம்பியைப்
பார்த்த தணிகாசலம் பதறிப் போனார்!
ஓரமாய் அவனுடன் முத்துவும் நின்றான்!