பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 / வயலூர் சண்முகம்


அஞ்சில் வளையாத அகம்பா வத்தால்
பிஞ்சில் பழுத்தப் பெரும்பிழை யாலே
நெஞ்சிலே துன்பம் மிகவும் அடைந்தான்!
தஞ்சம் தந்த மாமாவை வணங்கினான்!

உத்தம ராக உலகில் வாழ்வோர்
அத்தனை பேருக்கும் ஏதேனும் ஓர்குறை
நித்தமும் அவர்களை வருத்துதல் இயற்கை!
உத்தமர் தணிகாசலமும் ஓர்துய ருற்றார்!


அன்னம் என்னும் இளைய மகளுக்கு
என்ன காரணமோ இடது கைதான்
சின்ன தாகச் சூம்பித் தொய்ந்து
வின்னம் போல விளங்கியது! பாவம்!!

அழகும் அறிவும் அடக்கமும் உடையவள்!
பழகு வதற்கும் இனியவள் அன்னம்!
குழந்தை போலக் கபடம் இன்றிப்
பொழிந்தாள் அன்பை முத்து விடத்தே!