பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘டானா'முத்து /35



முத்து சிறுவனாய்த் தொடக்கப் பள்ளியில்
சித்திர அரிச்சுவடி எழுத்து கூடப்
புத்தியாய்க் கருத்தாய்க் கற்க வில்லை!
அத்தை முயன்றதும் வீணாய்ப் போச்சு!

'ஆனா' 'ஆவன்னா' எழுத்துக்கள் கற்கவே
ஆனான பாடெல்லாம் பட்டான் முத்து!
ஏனோ அவனுக்கு எழுதவே வெறுப்பு
‘டானா' மட்டுமே எழுதக் கற்றான்!

ஆங்கில எழுத்தில் 'ஓ' வைப் போலவே
ஈங்கும் 'டா'னா என்னும் எழுத்தைத்
தூங்கி வழியும் பச்சைப் பிள்ளையும்
பாங்காய் எழுத எளிதாய்க் கற்கலாம்!

மக்கு முத்துவும் மிகவும் எளிதாய்
'டக்'கென்று 'டானா' எழுதக் கற்றான்!
பக்கம் பக்கமாய் 'டானா' மட்டுமே
அக்கறை யாக எழுதிக் குவித்தான்!

'தே'னா முத்தென இன்னொரு முத்து!
மானேஜர் பிள்ளை! முத்துடன் பயின்றான்!
ஆன தினாலே கேலி யாக
'டானா முத்தென' இவனை அழைப்பார்!