பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



36 /வயலூர் சண்முகம்


பிள்ளை களிடத்தே இதனை ஓர்நாள்
சொல்லி விட்டார் தணிகா சலந்தான்!
மெல்ல மெல்ல விளையாட் டாக
எல்லோரும் முத்துவை 'டானா’ என்றனர்!


‘டானா'வாகவே தானிருந் தாலும்
‘டானா' பெயரால் தன்னை அழைப்பதை
ஏனோ முத்து ஏற்கவே இல்லை!
தானாய்த் தனியே அதற்காய் அழுதான்!


‘டானா' அத்தான் முத்து மீது
தேனாய் அன்பைப் பொழிந்த அன்னம்
பேனா பேப்பர் எடுத்துக் கொடுத்து
'ஆனா ஆ'வன்னா கற்றுக் கொடுத்தாள்!


தோட்ட வேலையில் மாமா வுக்கும்
வீட்டு வேலையில் அத்தைக்கு மாக
வாட்டம் இன்றி; வஞ்சம் இன்றி
நோட்டும் கையுமாய் உதவிகள் செய்தான்!


அத்தை அன்பும், மாமா அன்பும்
செத்துப் போன அம்மா அப்பா
வைத்துப் போன சொத்தைப் போலவே
முத்துவைத் திருத்தி சிந்திக்க வைத்தன!