பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

ளிய சந்தம், இலகுவான வார்த்தைகளைக் கொண்டு சிறுவர் சிறுமியர்க்கும், குழந்தைகளுக்கும் பாடப்படும் 'கதைப்பாடல்' என்னும் கவிதை வடிவத்தை இன்று கையாள்வோர் குறைவுதான்.

படிக்கச் சுவையாகவும், மனதில் இருத்திக் கொள்ள ஏற்ற எதுகை மோனை கொண்டவையாகவும் உள்ள இந்தக் கதைப்பாடல்களை எழுதிய கவிஞர் வயலூர் சண்முகம், தமிழிலக்கிய உலகில் முக்கியமான குழந்தை எழுத்தாளர்களுள் ஒருவர் என்று சொல்லலாம்.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைப் பாடல்களின் நீதிகளும் சமூகப் பார்வையும் நேற்றல்ல - இன்றல்ல - நாளை அல்ல, எக்காலத்திற்கும் தேவையானவை.

தமிழில், செம்மையாக, சிறுவர் இலக்கியம் படைக்கும் கவிஞர் தொகை குறைந்து கொண்டே வரும்நிலையில் கவிஞர் வயலூர் சண்முகத்தின் இந்த 'டானாமுத்து' கதைப்பாடல்கள் தொகுப்பு நூல், மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் புதிதாக சிறுவர் இலக்கியம் எழுத முற்படுவோருக்கு வழிகாட்டியாகவும் அமையும் என்பது எனது நம்பிக்கை.

மகிழ்வுடன்
எஸ்.ஆர். சுவாமிநாதன்