பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 / வயலூர் சண்முகம்

தனது மருகனே என்ற போதும்;
தனது வீட்டில் சரண்புகுந்தோன் ஆயினும்
மனதில் நிறைவுடன் முத்துவின் உழைப்பும்
கனிவும் கண்டு சம்பளம் தந்தார்!

'சிறுதொகை' ஆயினும் சேமிப்பு நலனே!
பெருகும் வெள்ளமாய்ப் பின்னர் ஒர்நாள்!
அறுசுவை உண்டி; ஆடைக ளுடனே
வருமானமும் சேமிப்பும் முத்துவை உயர்த்தின!

ஆசிரியர் மாமா, அத்தை; அத்தான்கள்;
வாசிக்க வைத்த அன்னம், பைங்கிளி
பேசும் தெய்வங்களாய் அவன்மனம் புகுந்தனர்!
மாசங்கள் முப்பதும் மறைந்தன விரைவாய்!

ஒருநாள் காலை ஒன்பது மணிவரை
மருமகன் முத்துவை வீட்டில் காணோம்!
மறுநாளும்; மறுநாளும் அவன்வர வில்லை!
புரியாத புதிராய் முத்து மறைந்தான்!