பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44/வயலூர் சண்முகம்


தாடிக் காரன் தன்வெறுங் கைகளாலே
ஆடிச் சுழன்று சண்டைகள் செய்தான்!
'போடு போடென' போட்டு நொறுக்கி
ஓட ஓட ரெளடிகளை விரட்டினான்!

பார்வதி கிழவனை வியப்புடன் பார்த்தாள்!
“யாரய்யா நீங்க? புண்ணிய வானே!
நேரத்திலே வந்து நெல்லையும் என்னையும்
வீரமா காப்பாத்தி விட்டீங்க ஐயா!"

இப்படிச் சொல்லிக் கிழவன் காலைக்
கப்பிக் கொள்ள வந்தாள் கிழவி!
அப்படியே அவளது காலில் வீழ்ந்து
“இப்படியா செய்வது?” என்றான் வந்தவன்!

மீசைகள் தாடியைப் பிய்த்தே எறிந்தான்!
ஆசை பொங்க "அத்தை!" என்றான்!
தூசித் தரையில் விழுந்து வணங்கினான்!
பேச வராமல் மலைத்தாள் அத்தை!

“முத்து!” “முத்து!!" முத்தெனக் கூவினாள்!
அத்தை பார்வதி அவனை அணைத்து
முத்தம் கொடுத்தாள்! உச்சி மோந்தாள்!
சத்தம் போட்டாள், சந்தோ ஷத்தாலே!