பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46 / வயலூர் சண்முகம்


திரும்பி வந்தவன்; திருந்தி வந்தவன்
விரும்பி விரும்பி விவசாயம் செய்தான்!
அரும்பும் வியர்வை சொட்ட நிதமுடன்
கரும்பும் நெல்லும் கழனியில் விளைத்தான்!

மூக்கன் பட்டிக்கே முன்னோடி யானான்!
ஆக்கும் பணிக்கே அறிவைச் செலுத்தினான்!
நாக்கில் தமிழ்த்தாய் நடனம் ஆடக்
காக்கும் கல்வியும் தானே பயின்றான்!


ஆண்டுகள் நான்கும் ஒடிமறைந்தன!
வேண்டும் அளவு பொருள்கள் ஈட்டினான்!
பாண்டு ரங்கம் என்பவர் மூலம்
தூண்டினாள் பார்வதி திருமணத்துக் காக!