பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆசிரியர் சார்பாக...

எனது தந்தையார் கவிஞர் வயலூர் சண்முகம் அவர்கள் ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன்பு, எழுபதுகளில் எழுதிய கதைப் பாடல்களின் தொகுப்பு நூல் இது. இன்றைக்கு சிறுவர்-குழந்தைகளுக்கென நேர்த்தியாக எழுதுவோர் எண்ணிக்கை குறைவுதான்.அதிலும் மரபுக் கவிதையின் எளிய வடிவங்களில் எழுதப்படும் கதைப் பாடல் என்னும் வடிவம் வெகுவாக குறைந்து போய் விட்டது என்றே சொல்லலாம்.

'கதைப் பாடல்’ என்னும் இலக்கிய வடிவம் முளைத்த இடம், நாட்டுப்புற இலக்கியமென்னும் 'வாய்மொழி - செவிவழி' இலக்கிய வயல் வெளியே.

நல்லதங்காள் கதை, அல்லி அரசாணி கதை, பிரகலாதன் கதை, காத்தவராயன் கதை, கட்டபொம்மன் கதை பெரிய மருதுகதை, சாகிப் மருதநாயகம் கதை போன்ற நாட்டார் வழக்காற்றியல் கதைகளே முதலில் தோன்றிய கதைப் பாடல்களாகும்.