பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52/ வயலூர் சண்முகம்

சதையும் நகமும் போல் இணைந்த
தம்பதி கள்தாம் என்செய்வார்?
எதனைக் கேட்டே எதை விடுப்பார்?
எளிதோ இறைவனின் விளையாட்டே

மனைவியின் மலடு; தன்குருடு
வறுமை துன்பம் அனைத்தும் போய்
இனிதாய்க் கொஞ்சும் மழலையுடன்
இன்பம் செல்வம் பெறவேண்டும்!

எந்த விதத்தில் இவை பெறவே
ஏக வரத்தைக் கேட்பதெனக்
கந்தன் சிந்தனை செய்திட்டான்!
காரிகை சுந்தரி தவிதவித்தாள்!

கந்தா இனியும் தயங்காதே!
கணத்தில் மறைந்தே போய்விடுவேன்.
"சந்ததி”, “பார்வை”, “சுகசெல்வம்”
சடுதியில் சொல்வாய் எதுவேண்டும்?”

வந்த சாதுவும் எழுந்துவிட்டார்!
வனிதை சுந்தரி பயந்து விட்டாள்!
கந்தன் சாதுவைத் தொழுதபடிக்
"கடவுளே நிற்பீர்” எனச் சொன்னான்