பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'டானா' முத்து / 61


புங்கம் பட்டிப் பக்கமெல்லாம்
புஞ்சைக் காடே மிக அதிகம்!
நொங்கு தந்திடும் பனைமரங்கள்
நூறு நூறாய்ப் பலவுண்டு!

மிளகாய்; கத்தரி; கிழங்குகளே
மிகவும் மக்கள் பயிர்செய்தார்!
வளமாய் எதுவும் அங்கில்லை!
வயிற்றுப் பிழைப்பே பெரும் தொல்லை!

'மானம் பார்த்த சீமை' யது!
மாரி பொய்த்தால் பஞ்சம்தான்!
தேனாய் நீரை மதிப்பார்கள்!
தேதி மழையே முதல்கடவுள்!

சாது வேலு மாமியிடம்
'தண்டச் சோறு' பட்டத்துடன்
வேதனை பட்டிடும் வேளையிலே
விபரீதமாய் வந்ததே கடும் பஞ்சம்!