பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 /வயலூர் சண்முகம்


பஞ்சம்! கோரப் பஞ்சந்தான்!
பாரே காணாப் பஞ்சம்தான்!
 புஞ்சைக் கரம்புத் தோட்டமெலாம்
பொட்டைத் திடலாய் ஆயினவாம்!

வருடம் பாதி ஆகியுமே
வானம் கருக்க வில்லையாம்!
கருடன் பறக்க வில்லையாம்!
கழுகுகள் பறக்க ஆயிற்றாம்!

ஆடு மாடு பிராணிகள்
அனைத்தும் மாண்டு போயினவாம்!
மேடு, பள்ள பூமிகளும்
வெடித்து வெடித்துப் பிளந்தனவாம்!

குடிக்கக் கூடத் தண்ணீர்தான்
கொஞ்சம் கூட இல்லையெனில்
வடிக்க அரிசி கிடைத்திடுமா?
வள்ளிக் கிழங்கும் கிடைத்திடுமா?

★★★★★