பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘டானா' முத்து / 65


கொன்று போடனும் பாவியையே!
கோணல் வலிப்பு சனியனையே!"
என்ற வாறு பலப்பலவும்
ஏசிக் கோதை குதித்திட்டாள்!

சோதா நாதனும் வேலுவையே
"துக்கிரி”! “பீடை"! என்றிட்டான்!
காதால் வசவுகளைக் கேட்டிட்டே
கண்ணீர் விட்டான் தனிமையிலே!

“யாரு செய்த பாவமிதோ?
எவரு வைத்த கொள்ளியிதோ?
ஊரு முழுசும் கருகிடுச்சு!
ஓலமிட்டால் ஆயிடுமா?

பஞ்சம் வந்தால், அதற்கிந்தப்
பையன் வேலுவா பொறுப்பாளி?
தஞ்சம் வந்த அனாதையைத்
தப்பாய்த் திட்டுவது பெரும் பாவம்!"