பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டானா முத்து / 69

கைகால் உதற; பல்கிட்ட
கண்கள் மூடிட மயங்கிட்டான்!
பையன் மயங்கி வீழ்ந்ததையே
பார்த்த ஜந்து ஒருநாய்தான்!

மாமி திட்டி தினம் ஊற்றும்
மாலைக் கஞ்சிச் சோற்றிலும்
சாமி வேலு அந்நாய்க்கே
தானும் கொஞ்சம் ஊற்றி வந்தான்!

அந்த நாய்தான் அவன்தோழன்!
அறிவும் நன்றியும் உள்ளதுவாம்!
'கந்தன்' என்றே அந்நாய்க்குக்
கனிவுடன் பெயரும் வைத்திருந்தான்!

வாயைத் திறந்து பேசாமல்;
வாலைக் குழைத்தே சுற்றிவந்து;
சேயைப் போல வேலுவுடன்
சேர்ந்தே திரியும் எப்போதும்!