பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'டானா' முத்து / 71


வறண்ட பூமியைப் பார்வையிட
வந்தே இருந்தனர் அதிகாரிகள்!
திரண்டே இருந்தது சிறுகூட்டம்!
ஜீப்பும் காரும் நின்றனவாம்!


தரையின் அடியில் ஆழத்தில்
தாவி ஓடும் நீரூற்றை
அரசினர் ஆணையால் கண்டறிய
அங்கே வந்தனர் அதிகாரிகள்!


பலப்பல இடங்களும் பார்த்தார்கள்!
பாறைகள் அருகும் ஆய்ந்தார்கள்!
“நிலத்தடி ஊற்று இப்பக்கம்
நிச்சயம் அகப்பட வழிஇல்லை!


நிலத்தின் அடியில் ஓடுகின்ற
நீரின் ஓட்டம் கண்டறியும்
'எலக்ட் ரானிக்' கருவியதும்
ஏனோ பழுதாய்ப் போயிற்றே!