பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 / வயலூர் சண்முகம்


“உங்கள் அதிருஷ்டம் அவ்வளவே!
ஊம்! ஊம்! கிளம்புவோம்!” என்றார்கள்
தங்க ராசுவும் அங்கிருந்தார்!
தாங்க முடியா வருத்தமுற்றார்!

கூட்டமும் மெல்லக் கலைந்த பின்னால்
குலைத்து வந்தது கந்தன்தான்!
வேட்டியைக் கடித்து ராசுவையே
வேகமாய் இழுத்தது பனந்தோப்புள்!

ராசு ஓடினார் அப்பக்கம்!
இன்னும் சிலரும் போனார்கள்!
மீசை வைத்திருந்த அதிகாரி
விஷயம் யாதென விசாரித்தார்!

சூதுகள் ஆடியும் 'முடிச்சவிழ்த்தும்'
'டூப்பு' விட்டும் திரிகின்ற
‘ராது' என்னும் சோம்பேறி
ராகம் போட்டுச் சொல்லிட்டான்;