பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

'டானா' முத்து/7


'டானா' முத்து!

முத்து என்பவன் முரட்டுப் பையன்!
சுத்த சோதா! சுயநலக் காரன்!
அத்தை உண்டு! அம்மா, அப்பா
செத்து விட்டனர், சின்ன வயதிலே!

சட்டிச் சட்டியாய்ச் சோறும், குழம்பும்
கெட்டித் தயிரும், கிழங்குக் கறியும்
அட்டியே இன்றி தினமும் தினமும்
கொட்டிக் கொண்டு கும்மாளம் அடிப்பான்!

மூளை மட்டும் முத்து வுக்கு
வேளை தோறும் வேகமாய்ச்சுழலும்!
பாளைப் பற்களால் பாங்காய்ச் சிரிப்பான்!
ஆளை மயக்குவான், ஆட்டம் போடுவான்!