பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘டானா' முத்து 179


லட்டும் துட்டும்!

மூலைக் கடையின் சேட்டு - படா
மோட்டா வான சேட்டு!
சேட்டு விற்கிற ஸ்வீட்டு - ரொம்பச்
“ச்சீப்பு!” ஸ்பெஷல் ரேட்டு!

கோணல் மூக்குக்கிட்டு - பொல்லாக்
குறும்புக் காரக் கிட்டு!
மூக்கைத் துளைச்சுது வாசனை! - கிட்டு
மூளையைக் குடைஞ்சுது யோசனை!

கடையை பார்த்தான் கிட்டு! - அவன்
கண்ணைப் பார்த்தார் சேட்டு!
லட்டுக் கேட்டான் கிட்டு - கிழ
லாலா கேட்டார் துட்டு!