பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8/ வயலூர் சண்முகம்



ஏனோ படிப்பு ஏறவே இல்லை!
தானாய் பள்ளி போகவே மாட்டான்!
பேனா, பென்சில் டஜன் டஜனாக
நானா விதங்களில் வாங்கித் தொலைப்பான்!

அத்தை செல்லம் அவனைக் கெடுத்தது!
மெத்தை படுக்கை விரித்துப் போட்டு
மத்தியானம் வரையில் குறட்டை விடுவான்!
சத்தம் போட்டு மாலையில் எழுவான்!

அண்டை அயலார்; அனுதாபம் உள்ளோர்
கண்டித் தார்கள்! கேட்க மறுத்தான்!
சண்டை போடச் சகாக்களை எல்லாம்
ரெண்டு கட்சியாய்ப் பிரித்து வைத்தான்!

சேட்டு வண்டியில் பட்சணம் திருடுவான்!
மூட்டை வண்டியில் நெல்லைச் சரிப்பான்!
ஆட்டை மாட்டை அடித்து நொறுக்குவான்!
பூட்டை உடைப்பான் போக்கிரி முத்து.