பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

95

அவன் தூர வீசி எறிந்தான். தீப் பெட்டியையும் அவ்விதமே விட்டெறிவதற் கிருந்தான் அவன். ஆயினும் கை அசைவைத் தடுத்து நிறுத்தி அந்தப் பெட்டியை அவன் தன் பைக்குள் வைத்துக் கொண்டான். ஒரே இடத்தில் மேலும் தங்கியிருக்க முடியாத அளவுக்கு அமைதியின்மை அவனைப் பற்றிக் கொண்டது. அதனால் அவன் வண்டியை வீட்டு வெளியே இறங்கினான். காற்றுக்கு எதிராக முதுகைத் திருப்பி நின்று, அரைக் கச்சையைத் தளர்த்தி இடுப்புக்கும் கீழாக இறக்கி இறுக்கிக் கொண்டான்.

‘படுத்தபடி சாவுக்காகக் காத்துக் கிடப்பதனால் என்ன பிரயோசனம்? அதை விட, குதிரை மேலேறி இங்கிருந்து கிளம்பிப் போவதே நல்லது.‘ இந்த எண்ணம் சடாரென்று உதயமாயிற்று அவனுக்கு. அதன் மேலே ஆள் யாராவது இருந்தால், குதிரை தானாகவே போகும்.’

நிகிட்டாவைப் பற்றி அவன் இப்படி நினைத்தான் அவனைப் பொறுத்த வரை அவன் உயிரோடு இருப்பது, செத்துப் போவது எல்லாமே அவனுக்கு ஒன்றுதான். அவனுடைய வாழ்க்கைக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அவன் உயிரை விடுவதற்கு வருத்தப்படமாட்டான். ஆனால் நான் உயிர் வாழ்வதற்கு அவசியம் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக வணக்கம், ஆண்டவனே!

அவன் குதிரையை அவிழ்த்து, வார்களைக் கழுத்து மேலே போட்டு விட்டு, ஏறி உட்கார முயன்றான். ஆனால் அவனுடைய கோட்டுகளும் பூட்ஸும் அதிகம் கனத்திருந்ததால் அவனால் ஏற முடியவில்லை. அவன் வண்டியின் மீது ஏறி நின்று அங்கிருந்து குதிரை