பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

111

அவன் தன்னைத் தானே சாந்தப் படுத்திக்கொண்டு மூச்சு வாங்குவதை சரிப்படுத்த முயன்றான். நிகிட்டா முன்பு இருந்த இடத்தில் இல்லை. ஆனால், பனியினால் நன்கு மூடப்பெற்ற ஏதோ ஒன்று வண்டியினுள்ளே கிடந்தது. அது தான் நிகிட்டா என்று வாஸிலி முடிவு செய்தான்.

அவனுடைய பயம் முற்றிலும் அவனை விட்டு நீங்கிவிட்டது. அவனுக்கு இப்பொழுது ஏதாவது பயம் இருந்தது என்றால், அதுதான் குதிரையின்மீது அமர்ந்திருந்தபோதும், முக்கியமாக பனி ஓட்டத்தினூடே தன்னந்தனியனாக விடப்பட்ட போதும், அவனைப் பற்றிக் கொண்ட மகாபயங்கரமான பயம் மறுபடியும் தன்னைக் கவ்விக்கொள்ளுமே என்பதே ஆகும். எந்த விதத்திலாயினும் அவன் அந்த பயத்தை விலக்கியே ஆகவேண்டும். அது தன்னை அணுகாமல் கவனித்துக்கொள்வதற்காக அவன் ஏதாவது செய்தாகவேண்டும்—சும்மா இராமல் எந்தக் காரியத்திலாவது அவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

எனவே, அவன் செய்த முதல் காரியம், காற்றுக்கு எதிராக முதுகைத் திருப்பி வைத்து, தனது ரோமக் கோட்டைத் திறந்துவிட்டுக் கொண்டதுதான். பிறகு, தனது மூச்சு ஓர் சிறிது சரிப்பட்டதும், அவன் தன்னுடைய பூட்ஸினுள் புகுந்திருந்த பனியை வெளியே கொட்டினான். இடது கை உறையிலிருந்து அதை அகற்றினான். (வலது கை உறை கிடைக்கும் என்று நம்புவதற்கே இடமில்லாதபடி தொலைந்து போய் விட்டது. எங்கோ விழுந்து கிடக்கும் அதன்மீது இந் நேரத்திற்குள் ஒரு அடி உயரம் பனி படிந்து மூடி