பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

டால்ஸ்டாய் கதைகள்

யிருக்கும்.) அதன் பிறகு, அவன் குடியானவர்களிடம் போய் தானியம் வாங்கி வரக் கிளம்புவதற்கு முன்னால் வழக்கமாகச் செய்து கொள்வது போலவே இப்பொழுதும் தனது அரைக் கச்சையைக் கீழே தணித்து இறக்கி இழுத்துக் கட்டிக் கொண்டு வேலைக்குத் தயாரானான்.

முதன் முதலாக, அவனுக்குத் தோன்றிய விஷயம், முக்கார்ட்டியின் காலை வாரிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதுதான். அதைச் செய்து முடித்து, வண்டியின் முன்புறத்தில் உள்ள இரும்புப் பிடியில் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருந்தது போலவே குதிரையை இப்பொழுதும் கட்டி வைத்தான். பிறகு, அதன் கால் பட்டையையும் சேணத்தையும் சரிப்படுத்தி அதனுடைய தேகத்தைத் துணியால் மூடுவதற்காக அவன் குதிரையைச் சுற்றி வந்தான். அவ்வேளையில் வண்டியினுள் ஏதோ அசைவதை அவன் கவனிக்க நேர்ந்தது.

மூடி மறைந்திருந்த பனிக்கு வெளியே உயர்ந்து தோன்றியது நிகிட்டாவின் தலை. அரைவாசி உறைந்து போயிருந்த நிகிட்டா மிகுந்த சிரமத்தோடு எழுந்து உட்கார்ந்தான். அவன் தனது கையை மூக்கின் முன்னால் விசித்திரமான முறையில் ஆட்டி அசைத்துக் கொண்டிருந்தான், ஈக்களை விரட்டி ஓட்டுகிறவன் போல. அவன் தன்னுடைய கையை அசைத்தான்; என்னவோ சொன்னான்.

அவன் தன்னை அழைப்பதாகத் தோன்றியது வாஸிலிக்கு. அதனால் வாஸிலி துணியைச் சரிப்படுத்தாது அப்படியே போட்டுவிட்டு, வண்டியை நெருங்கிச்