பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

டால்ஸ்டாய் கதைகள்


கீழே கிடந்த நிகிட்டாவினாலும் மேலே கிடந்த ரோமக் கோட்டுகளாலும் அவன் உஷ்ணம் பெற்று வந்தான். நிகிட்டாவின் விலாப்புறங்களைச் சுற்றி கோட்டின் ஓரங்களைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளும், காற்றினால் அடிக்கடி திறந்து போடப்பட்ட அவனது கால்களும்தான் பனியில் உறையத் தொடங்கின. முக்கியமாக, கையுறை இல்லாத வலது கைதான் மிகுதியும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவன் தனது கால்களைப் பற்றியோ கைகளைப் பற்றியோ, சிந்தித்தானில்லை. தனக்குக் கீழே கிடக்கும் குடியானவனை எப்படி உஷ்ணப்படுத்தலாம் என்பது பற்றியே எண்ணினான் அவன்.

பலமுறைகள் அவன் முக்கார்ட்டியின் பக்கம் பார்வை எறிந்தான். அதன் முதுகு மூடப் பெறாததையும், கம்பளித் துணியும் வார்ப்பட்டையும் கீழே பனியில் விழுந்து கிடந்ததையும் அவன் காண முடிந்தது. எழுந்து, அவற்றை எடுத்து, குதிரையைப் போர்த்த வேண்டும் என்று பட்டது அவனுக்கு. ஆயினும், நிகிட்டாவை விட்டு விலகி, தான் அனுபவித்துக் கொண்டிருந்த ஆனந்த நிலையைக் குலைத்து விட அவன் மனம் இடம் தரவில்லை. எவ்விதமான பயத்தையும் அவன் அப்புறம் உணரவில்லை.

‘பயப்பட வேண்டாம். இந்தத் தடவை நாம் அவனை இழந்துவிட மாட்டோம்’ என்று அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். குடியானவனை உஷ்ணப் படுத்துகிற தனது முயற்சிபற்றித் தான் அவன் குறிப்பிட்டான். தான் பொருள்களை வாங்குவதையும் விற்பதையும் பற்றிப் பெருமையாகப்