பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

123

களும் விறைப்படைந்து, குளிர்ந்து, இரும்புக் குண்டுகள் போல் கனத்துக் கிடந்தன.

‘அவர் செத்துப் போயிருக்க வேண்டும். மோட்ச சாம்ராஜ்யம் அவருக்குப் சித்திப்பதாக!’ என்று நினைத்தான் நிகிட்டா.

அவன் தனது தலையைத் திருப்பிக்கொண்டு, தன்னைச் சுற்றிலுமிருந்த பனியைத் தன் கையினால் தோண்டி விலக்கி விட்டு, கண்களைத் திறந்து பார்த்தான்.

பகலின் ஒளி எங்கும் பரவியிருந்தது. முன் போலவே காற்று, வண்டிச் சட்டங்களினூடாக, விசிலடித்துத் திரிந்தது. பழைய மாதிரியே இன்னும் பனி விழுந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அது. வண்டியின் சட்ட அமைப்புகளை மோதி விலகி ஓடவில்லை; ஓசை எதுவுமின்றி வண்டியையும் குதிரையையும் கனமாக, அதிகக் கனமாக, மூடி மறைத்தது. குதிரையின் அசைவுகளோ, மூச்சுவிடும் ஓசையோ இப்பொழுது காதில் விழவில்லை.

‘அதுவும் உறைந்துதான் போயிருக்கும்’ என்று நிகிட்டா முக்கார்ட்டியைப்பற்றி எண்ணினான். உண்மையும் அது தான். வண்டி மீது பட்ட குளம்பின் தாக்குதல்—நிகிட்டாவை எழுப்பிவிட்ட ஓசைதான்—முக்கார்ட்டியின் இறுதிப் போராட்டமாகும். அதற்கு முந்தியே குளிரினால் உணர்ச்சி குன்றியிருந்த குதிரை சாகும் தறுவாயிலும் சோர்வுறாது நிற்பதற்காகச் செய்த தீவிர முயற்சிதான் அது.

'ஓ எந்தையே, என் இறைவா! நீ என்னையும் அழைப்பதாகத் தோன்றுகிறது. நின் சித்தம் நிறைவேறுவதாக! ஆனால் இது ஏதோ இயற்கைக்கு